அறிக்கை

 • அத்திக்கடவு - அவிநாசி நதிநீர்: இணைப்பை நடைமுறைப்படுத்த கடந்த 20 ஆண்டுகளாக பல்வேறு போராட்டங்களை நடத்தி, குறிப்பாக 186km தூரம், 7 நாட்கள் 20000 பேர், நடைபயணம், உண்ணாவிரத போராட்டம், பைக் பேரணி, மறியல் போராட்டம், எழுச்சி மாநாடு நடத்தி வெற்றிகரமாக கொண்டு வந்தோம். இதனால் 1000 ஏக்கருக்கு மேலாக விவசாய நிலங்களும் இரண்டு மாவட்டங்கள் குடிநீர் பிரச்சனை துடைத்தோம். இன்று அதே போல் கோரையாறு - திருமணிமுத்தாறு நதிநீர் இணைப்பை செயல்படுத்தி நாமக்கல் மாவட்ட விவசாய, குடிநீர் நிலத்தடிநீர் பெறுக போராடிக் கொண்டு வருவோம்.

 • மின்கோபுரம்  விவசாய நிலத்தில் அமைத்தல் - இது எவ்வளவு  சாபக்கேடான விஷயம், இருக்கும் நிலத்தில் உயர்  மின் அழுத்தம், அதாவது high tension electricity கம்பத்தை நட்டால் அங்கு எப்படி விவசாயம் செய்வது ? மழைக்காலங்களில், short - circuit, புயலால் சேதம்,இவற்றில் இருந்து உயிர், உடைமைகளை காப்பது எப்படி ? ஏன் சாலையோரம் கேபிள் பதிக்கக்கூடாத ?எதற்கு எடுத்தாலும் விவசாயநிலம் தான் வேண்டுமா ?சாலை போட வேண்டுமென்றால் விவசாயநிலம், மின்கோபுரம் அமைக்க வேண்டுமென்றால் விவசாயநிலம், தொழிற்பேட்டை அமைக்க வேண்டுமென்றால் விவசாயநிலம், தாமிர கழிவுகளை கொட்ட விவசாய நிலம், ஏனென்றால் விவசாயி தான் ஏமாளி.அவனை சுரண்டி ஏமாற்றும் வேலையை அனுமதிக்க மாட்டோம்.ஒன்று கூடி போராடுவோம்.விவசாய நிலைங்களில் எந்த ஒரு அரசு ஆக்ரமிப்புக்கும் அனுமதிக்க மாட்டோம். மாற்று ஏற்பாடாக, சாலையோரம் மின்சார கேபிள் பதிக்க போராடுவோம் .

 • விவசாய கடன் தள்ளுபடி - இது எங்களின் நீண்டநாள் கோரிக்கை. பத்தாயிரம் கோடி, 50000 கோடி, லட்சம்கோடி வங்கியில் நாம் சேமித்த பணத்தை கடனாக பெற்றுவிட்டு, கம்பெனி நட்டம் என்று கூறி, தள்ளுபடி செய்கிறார்கள். வங்கியில் வாரக்கடன் மட்டும் 8 லட்சம் கோடி. விவசாயகடன் வெறும் 6000 கோடி. 1/15 மடங்கு கடனை தள்ளுபடி செய்ய மறுக்கிறார்கள். ஆனால் பெரும் முதலாளிகளுக்கு நம் உழைப்பில் ஆன சேமிப்பு பணத்தை கொடுத்துவிட்டு, நம் வாழ்வில் அடிக்கிறார்கள். அனைத்து விதமான விவசாயகடன்கள் தள்ளுபடி செய்யப்பட வேண்டும் என்பது எங்களது குறிக்கோள். இதற்காக நாடாளுமன்றத்திலும் மாநிலத்திலும் போராடி கொண்டு வருவோம் என்று உறுதி கூறுகிறேன்.

 • நலிவடைந்த விவசாயிகளின் முன்னேற்றம் - இன்று பங்குச் சந்தை குறியீட்டு எண் 38500 புள்ளிகள்.அபரி விதமான வளர்ச்சி யாருக்கு 135 கோடி மக்களில், 6.1% பேருக்கு.இந்தகுறியீட்டு புள்ளி. இன்று மழையில்லாமல் ஒரு பயிர் கூட விளைவிக்காமல் வாடும் விவசாயின் நிலை குறிக்கிறதா ?கடன்பட்டு துடிக்கும் ஏழை விவசாயியை குறிக்கிறதா ?தனது நிலத்தை விற்று குழந்தைகளை படிக்கவைக்க போராடும் விவசாயியை குறிக்கிறதா ? 135 கோடி பேருக்கு சொந்தமான இந்த நாட்டை,மண்வளம், கனிமவளம், நீர் ஆதாரம் ஆகியவற்றை கூறுபோட்டு 0.1% முதலாளிகளுக்கு விற்கும் உங்கள் ஏமாற்று இனிமேல் நடக்காது. இந்த மண்ணின் மைந்தர்கள், எல்லோருக்கும் சோறுபோடும் விவசாயிகளுக்கு உரம், விதைகள், விவசாயகருவிகள் பயன்பாடு இலவசமாக வழங்க உறுதியளிக்கிறோம்

 • நெடுவாசல், மீத்தேன், Hydrocarbon, Gail Natural Gas, HT Tower, எட்டு வழிச்சாலை. இந்த அனைத்து திட்டங்களும் விவசாய நிலங்களில் வர அனுமதிக்கமாட்டோம். மாற்றாக சாலையோரம், கடலோரம் பயன்படாத நிலங்களில் நிறைவேற்றிக்கொள்ளுங்கள். இந்த மண்ணுக்கு சொந்தக்காரர்கள், மண்ணின்மைந்தர்கள், இந்திய மற்றும் ஆங்கிலேய சட்டங்கள் கொண்டு வருவதற்கு முன்பாக தலை முறையாக வாழ்ந்து வந்த எங்கள் நிலத்தை முட்டாள் தனமான கொள்கையால், அபகரிக்க விடமாட்டோம். இந்த அனைத்து திட்டங்களையும் ரத்து செய்ய உறுதி அளிக்கிறோம். எங்கள் நிலத்தை அராஜகமாக எடுக்க நீங்கள் யார்? உங்களை உருவாக்கியது யார்? நியாமாக நங்கள் போராடினால் துப்பாக்கிசூடா? எங்கள் நிலத்தை காப்பாற்ற நாங்கள் இறக்க வேண்டும், ஊழல் ஆட்சியாளர்கள் ஒரு முதலாளியிடம் பணம் பெற்றுக் கொண்டு விரட்டுவீர்களா?

 • கல்விக்கடன் - பள்ளிக்கல்வி, பொறியியல் பட்டப்படிப்பு, கலை மற்றும் அறிவியல் படிப்பு மருத்துவம். இது எல்லாமே தனியார் மயம் அரசு கல்விக்கொள்கை என்று எதுவுமே இல்லை. கடந்த 10 ஆண்டுகளாக ஒரு பொறியியல், மருத்துவக் கல்லூரி கூட துவங்கவில்லை. ஆனால் 100 கணக்கான தனியார் கல்லூரிகள் தொடங்கிவிட்டன. இந்த சூழ்நிலையில் நம் குழந்தைகள் கடன் வாங்கி படிக்கிறார்கள். இதை கடன் என்று சொல்வது நியாயமா? அரசின் இயலாமையால் கடனாளியாக்கப்பட்டோம் என்பது தான் உண்மை. இந்த கொள்கை ரீதியாக தோல்வியால் திணிக்கப்பட்ட அனைத்து விதமான கல்விக்கடனை தள்ளுபடி செய்வோம்.

 • மருத்துவம் - ஒரு நாட்டின் வளர்ச்சி என்பது, அங்குள்ள மக்களின் ஆரோக்கியத்தையும், வாழ் நாட்களை பொறுத்தது. அரசு டெங்கு, மலேரியா என கொசுக்களால் பரவும் நோய் காரணிகளையும் கட்டுப்படுத்தவில்லை. மருத்துவமனைக்குச் சென்றால் நோயையும் கட்டுப்படுத்த முடியவில்லை. ஒரு அலட்சியமான போக்கு மற்றும் நிர்வாகம். உடல்நிலை சரியில்லை என்று மருத்துவமனை சென்றால் HIV ரத்தம் ஏற்றுகிறான். எப்படி செல்வது? வாக்குறுதிகளை நம்பி ஒரு முறை வாய்ப்பளித்தோம், நடந்தது என்ன? 13 AIIMS மருத்துவமனை  அதாவது உயர் சிகிச்சை பிரிவு வசதியுள்ள மருத்துவமனை என்று 5 ஆண்டுகளுக்கு முன்னர் அறிவிப்பு. நிதர்சனம் என்ன வென்றால் இன்னும் ஒன்று கூட பயன்பாட்டுக்கு வரவில்லை. எப்படி மருத்துவம் சாத்தியமாகும்? நாங்கள் நாடாளுமன்றத்துலேயே போராடி தமிழகத்துக்கு மேலும் 4 AIIMS மருத்துவமனைகளும், மாநில மருத்துவமனைகளை உயர்த்த போராடுவோம், பெற்று தருவோம் என்று உறுதியளிக்கிறேன்.

 • வியாபாரிகள் மற்றும் வணிகர்கள் - இன்று அன்னிய நிறுவனங்கள் சில்லரை விற்பனையில் கால் பதித்து நமது வாழ்வாதாரத்தை கேள்விக்குறியாக்கிவிட்டன. Reliance Fresh, Tata star bazaar, Wallmart, Flipkart, Amazon போன்ற நிறுவனங்களின் உத்தி என்னவென்றால், வங்கியில் நமது சேமிப்பு பணத்தை கடனாக வாங்கி தள்ளுபடி பெற்று, நம்ஊரில் தொடங்கி 50% விலை குறைப்பில் சிறிதுகாலம் விற்பார்கள். அரசுக்கு நட்டக் கணக்கு காட்டி தள்ளுபடி பெறுவது, இங்கு வியாபாரிகள், வணிகர்களை அழித்து எந்த போட்டியும் இல்லாதபோது, 200% விலை நிர்ணயம் செய்து மக்களை ஏமாற்றிகோலோச்சுவர்கள். சேலத்தில் ஏற்கனவே தொடங்கிவிட்டார்கள். இந்தநிறுவனங்களை முற்றிலுமாக ஒழிப்போம்.

 • பொருளாதார வளர்ச்சி - நம் நாடு உண்மையில் பொருளாதார வளர்ச்சியில் பின்தங்கி உள்ளது. இன்று சிறு, குறு கட்டுமான தொழில்கள் முழுவதும் நசுங்கிவிட்டன. மக்களிடம் பணப்புழக்கம் முழுவதும் முடங்கிவிட்டது. ஆனால், பங்குச்சந்தை புள்ளிகள் உயர்ந்து பெரு முதலாளிகளின் முதலீடு 1000 மடங்கு பெருகுகிறது. இதுதான் வளர்ச்சியா? இன்று மக்கள் கையில் பணப்புழக்கம் உள்ளதா? சிறு, தொழில்கள் வளர்ச்சிபெற கடன்தள்ளுபடி, வரிரத்து, பொருளாதார பூங்காக்கள் அமைக்க பாடுபடுவோம் .

 • இளைஞர்கள் வேலைவாய்ப்பு - நம் குழந்தைகள், நம் எதிர்காலம், நம் உச்சபட்ச அன்புக்கு உரியவர்களை குறைந்தது. 17 ஆண்டுகள் கடினப்பட்டு நிலத்தை விற்று, நகையைவிற்று, வேலைசெய்து படிக்க வைக்கிறோம். அத்தனை குழந்தைகள் இன்று இளைஞர்களாக வளர்ந்து வேலை இல்லாமல், பன்னாட்டு நிறுவனங்களால் தொழில் தொடங்க முடியாமலும் திண்டாடி வருகின்றனர். இதை ஒத்துக் கொள்ளமுடியுமா ? அவர்களின் எதிர்காலம் என்ன ஆவது ? BE, MBA படித்தவர்கள் துப்புரவு தொழிலாளர் பணிக்கு விண்ணப்பித்துள்ளார்கள். இதுதான் வேலைவாய்ப்பா ? தொழில் தொடங்கும் பெண்களுக்கு ரூ.50000, வட்டியில்லா கடன், 55 லட்சம்பேருக்கு மக்கள்நலப் பணியாளர் வேலை, 50 லட்சம் இளைஞர்களுக்கு தொழிற் பூங்காக்களில் வேலைவாங்கித் தரப்படும். இளைஞர்கள் தொழில்தொடங்க, வேலைவாய்ப்பு பெறுக என்றும் பாடுபடுவோம்.

 • விவசாயி வருமானம் ரட்டிப்பு - இந்த ஆட்சியாளர்கள் ஆட்சிக்கு வரும் போது, விவசாயிகளின் வருமானம், 5 ஆண்டுகளில் ரெட்டிப்பாக்கப்படும் என்று உறுதியளித்தார்கள். இன்று யாருக்காவுது, கரும்புடன்னுக்கு, இரண்டுமடங்கு, கிழங்கு மூட்டைக்கு இரண்டு மடங்கு, நெல் மூட்டைக்கு இரண்டு மடங்கு, பால்லிட்டருக்கு, மஞ்சள் குவிண்டாலுக்கு இரண்டு மடங்கு, என்று சம்பாதித்தது உண்டா? பட்ஜெட்டில் குறைந்தபட்ச ஆதார விலை நிர்ணயம் ஒரு நாடகம் நடத்தினார்கள், ஏதாவுது நடந்ததா? இந்த ஏமாற்று வேலைக்கு முற்றுப் புள்ளிவைத்து, விவசாய பொருளுக்கு குறைந்தபட்ச விலை நிர்ணயம் செய்வோம் என உறுதி கூறுகிறேன்.

 • Toll Gate - கடந்த தேர்தலில், நாங்கள் ஆட்சிக்கு வந்த 3 ஆண்டுகளில் அனைத்து Toll Gate மூடப்படும் என்று வாக்குறுதி அளித்தனர். ஒரு Toll Gate ஆவது மூடியதுண்டா?  ஒரு சாலைபோடும் போது, நிலத்தின் விலை, கட்டுமான பொருட்கள், முதலீட்டுக்கு வட்டி என சேர்த்து, ஒப்பந்த காலம் நிர்ணையிக்கப்படுகிறது. இன்று வாகன வளர்ச்சி 25%  அப்படி யென்றால் உபரியாக 25% , 50% , 75% வருமானம் வந்துவிட்டது. இன்னும் அதை மூடாமல் தொடர்வது ஏமாற்று வேலை இல்லையா?. சாலை வரி என்று ஒவ்வொரு வாகனத்திற்கும் 15% முதல் வசூலிக்கிறார்கள். இது எதற்காக? நங்கள் ஒப்பந்தம் முடிந்த Toll Gate அனைத்தையும் மூடிவிடுவோம் என்று உறுதியளிக்கிறேன்.

 • கருப்பு பணம் - இந்த பாரத நாட்டில் மனிதவளம், மண்வளம், நீர்வளம், இயற்கைவளம் ஆகியவற்றில் வருமான பணத்திற்கு வரி கட்டாமல், 24ல் cr, Swiss வங்கியில் 100 பேர் டெபாசிட் செய்துள்ளார்கள். சுப்ரீம் கோர்ட் கேட்டும் கூட, அவர்கள் பெயர்களை வெளியிடவில்லை. இதை இந்தியா கொண்டு வந்து சாதாரண மக்களின் துயர்துடைப்போம் என்றார்கள். ஏன் இந்தியா அயல் நாடுகளிலும். உலக வங்கியிலும் வாங்கிய கடன் அளவும் இதே 24 லட்சம்கோடி. இதில் 10% கொண்டு வந்திருந்தால், விவசாயகடன், வேலைவாய்ப்பு, மருத்துவம், கல்வி, நதிநீர் இணைப்பு என்று அனைத்தையும் நிறைவேற்ற முடியும்.

 • பண மதிப்பிழப்பு மற்றும் GST: Demonitization என்கிற பண மதிப்பீடு நடவடிக்கைகளின் குறிக்கோளாக சொல்லப்பட்டது, கறுப்புப்பணம் ஒழியும், வரி வருவாய் பெருகும், பொருளாதாரம் செழிக்கும் என்று எவ்வளவு பெரிய பித்தலாட்டம். 98.2 % மதிப்பிடிப்பு பணம் ரிசர்வ் வங்கியை வந்தடைந்து. 1.8 % பணம் வரவில்லை. ஆனால் புதிய ரூபாய் அச்சடிக்க 5% செலவு. மொத்தத்தில் 3.2% அதாவது 65,000 கோடிநட்டம், மக்களின் பணம் வங்கியில் முடக்கம், சொந்தமாக சம்பாதித்த பணத்தை, உழைப்பை செலவு செய்யமுடியவில்லை.      GST - வரி என்று சிறு, குறு, குடிசைத் தொழில்களை, கட்டுமானதொழில் வேலையில் இறங்கி இன்று அனைத்தையும் அழித்து விட்டு பெருமுதலாளிகளின் கம்பெனிகள் மட்டுமே இருக்கின்றன. இதுதான் பொருளாதார வளர்ச்சியா? நாங்கள் சிறு, குறு, தொழில்கள், விவசாய மதிப்பு கூட்டுப் பொருள்களுக்கு விளக்கு அளிக்க போராடி பெற்று தருவோம்.

 • நீர் மேலாண்மை மற்றும் நதி நீர் இணைப்பு - மழைக் காலங்களில் 40-50 TMC நீர், அதாவது காவேரி ஆற்றை சுற்றியுள்ளது மாவட்டங்களில் பைப் கனெக்ஷ்ன் மூலமாக ஆண்டு முழுவதும் விவசாயத்திற்கு போதுமான நீர் கடலில் கலந்து வீணாகிறது. இந்த நீரை உபரி கால் வாய்கள் மூலம், நாமக்கல், ராசிபுரம், நாமகிரிப்பேட்டை, புதுப்பட்டி, சங்ககிரி, திருச்செங்கோட்டில் உள்ள துணை ஆறுகளில் ஓடைகளில் இணைத்தல், குடிநீர் பற்றாக்குறை விலகும், விவசாயம் செழிக்கும், நிலத்தடிநீர் மேலாண்மை செய்கிறார். இங்கு தூர் வாரக்கூட முடியவில்லை. நாங்கள் இந்த நாமக்கல் மாவட்டத்தில் நீர் மேலாண்மை செய்வோம். செய்தே தீருவோம்.

 • பெட்ரோல் பொருட்கள் விலை உயர்வு - சந்தை நில வரத்திற்கேற்ப பெட்ரோல், டீசல் விலை நிர்ணயம் என்ற தவறான கொள்கையால், எண்ணெய் நிறுவனங்கள் தினம் தினம் விண்ணை முட்டுமளவுக்கு விலையை உயர்த்தி வருகிறார்கள் டீசல் விலை 40.00ரூ மாநில வரி 20.00ரூ, மத்திய வரி 10.00ரூ, 40 ரூபாய் பொருளுக்கு 30ரூ வரியை எங்காவது கேட்டதுண்டா? நாங்கள் பழைய விலை நிர்ணய முறையை கொண்டு வந்து விலை குறைப்பை அமல்படுத்துவோம்.

 • கைத்தறி மற்றும் நெசவாளர் நலன் - GST வரி விதிப்பு, அன்னிய பொருட்கள் சந்தைப்படுத்துதல், மூலப்பொருள் விலை உயர் வால் பாதிக்கப்பட்டுள்ள இத்துறைக்கு இலவச மின்சாரம், முத்ரா கடன் தள்ளுபடி செய்யவோம். மேலும் இத்துறைகள் வளர்ச்சிக்கு சுயசார்பு சந்தைகள் திறக்கப்படும்.

 • சிறு தொழில் முன்னேற்றம் - கோழிப்பண்ணை, லாரி, ஹோட்டல்கள், பாடி ஒர்க்ஸ் மற்றும் இதர சிறு தொழில்கள் அரசின் அதிகாரப் போக்கினால் கண்டு கொள்ளப்படவில்லை. இத்தொழிலை பாதுகாக்கவும் உரிய நிதி ஆதாரம் அளிக்கவும் ஆவணசெய்யவோம்.

 • தேச /நாட்டின் பாதுகாப்பு: ·         கடந்த தேர்தலில் BJP தேச நலன் காக்க போராடும் என்று உறுதியளித்தது என்று இங்குள்ள யாராவது சொல்லுங்கள், இந்தியாவிற்கு எதாவது ஒரு அண்டை நாட்டுடன் போர் நடக்கிறதா? சொல்லுங்கள் போர் நடக்கிறதா? இல்லை. ஆனால் இந்த மண்ணின் மைந்தர்கள், நம் இராணுவ வீரர்கள் தினமும் 10 பேர் உயிர் தியாகம் செய்கிறார்கள். இது தான் பாதுகாப்பு கொள்கையா?.    இரு முனை போர் வந்தால் சமாளிக்க விமானப்படைக்கு சுமார்  500 போர் விமானங்கள் தேவைப்படுகின்றன. இதை உருவாக்க இந்திய தயாரிப்புக்காக சுமார் 2.5L கோடி செலவாகியுள்ளது. ஒரு விமானமாவது ஏதாவது ஒரு போரில் (அ ) தீவரவாத நடவடிக்கைக்கு உபயோகப்படுத்தியதுண்டா? இந்த பணம் என்னாயிற்று? பாதுகாப்பு?... தமிழ்நாடு பாதுகாப்பா - நம் குழந்தைகளை பள்ளி கல்லூரிகளுக்கு படிக்க அனுப்புகிறோம். ஆனால் இங்கே என்னவென்றால் படுக்கைக்கு அழைப்பது, சமூக விரோத கும்பல் வீடியோ எடுத்து பாலியல் வன்கொடுமை செய்து நகை,பணம் பறிப்பது உள்ளிட்ட கொடூர செயல்களை தைரியமாக செய்கின்றது. இது தான் பாதுகாப்பா?...

 • பழைய ஓய்வூதிய திட்டம் - நாங்கள் உழைக்கிறோம். நம் ஆசிரியர்கள், போக்குவரத்து தொழிலாளர்கள், கிராம அலுவலர்கள், காவலர்கள் உட்பட அனைத்து அரசு ஊழியர்களுக்கும் வேலைக்கேற்ற ஊதியம் வழங்கப்படுகிறது. இந்த ஊதியத்தில் PF, ESI, Pension, பணம், அதாவது நமது மாத சம்பளத்தில் பிடித்தம் செய்யப்படுகிறது. இந்தப் பணம் 30 ஆண்டுகளுக்கு திரும்ப எடுக்கவோ, கொடுப்பதோ இல்லை. இதை LIC, பொதுத்துறை முதலாளிகளுக்கு கடன் என்ற பெயரில் தானமாக கொடுத்து விட்டு பின்னர் எங்கள் எங்கள் பணத்தை ஒய்ஊதியமாக கொடுக்க உங்களுக்கு என்ன தயக்கம்? நீங்கள் யார் எங்கள் பணத்தை கொள்ளையடிக்க நாங்கள் வெற்றி பெற்றால் பழைய ஓய்வூ தியத்திட்டத்தை அமல்படுத்தி நீதியை நிலை நாட்டுவோம்.